இளையநிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் உடல்நலம் பெற வேண்டி, இசைஞானி இளையராஜா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக , அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அவர் உடல்நலம் தேறிவிட்டதாக மருத்துவமனை, ஆகஸ்ட் 13ம் தேதி தெரிவித்திருந்த நிலையில், இன்று ( ஆகஸ்ட் 14ம் தேதி), அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் ஆகிவிட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரண் விளக்கம் : அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
In a video message, legendary music composer #Ilayaraja wishes #SPBalasubramaniam well and urges him to recover and come back quickly. pic.twitter.com/b80i1XK8sM
— Ranjitha Gunasekaran (@ranjim) August 14, 2020
இதனிடையே, இசைஞானி இளையராஜா, இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பாலு சீக்கிரம் எழுந்து வா, உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று தொடங்கி 86 வினாடிகள் அந்த வீடியோ தொடர்கிறது. நம் நட்பு சினிமாத்துறையையும் தாண்டியது. நீ விரைவில் உடல்நலம் பெற்று திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக அதில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக பிரார்த்திக்குமாறு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ள நிலையில், துக்கம் மனதை பிசைகிறது என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil