தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆனது: மதுரை, திருப்பூரில் தலா ஒருவர் சிகிச்சை
தமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
3 new COVID19 positive cases in Tamil Nadu, coronavirus 3 new postive cases, கொரோனா வைரஸ், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, COVID19 positive cases increased 12 in tamil nadu, அமைச்சர் விஜயபாஸ்கர், minister vijayabaskar tweet, தமிழத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 12 ஆக உயர்வு, coronavirus latest news, tamil nadu coronavirus latest news, corona virus latest updates, tamil nadu corona news
தமிழகத்தில் மார்ச் 23ம் தேதி மட்டும் மதுரை நபர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், தமிழக அரசு மார்ச் 31 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டது.
பிரதமர் மோடியின் அறிவிப்பின்பேரில் மார்ச் 22-ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அத்தியாவசிய பணிகள் தவிர அலுவலகங்கள் செயல்படாது என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் கோரோனா வைராள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், மதுரை, திருப்பூர் நபர் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை புரசைவாக்கம், திருப்பூர், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பகக்த்தில், “தமிழகத்தில் புதிதாக மேலும் 3 பேருக்கு கோவிட்19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே போல, லண்டனில் இருந்து இந்தியா வந்த திருப்பூரைச் சேர்ந்த 48 வயதுள்ள நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி திவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கெனவே 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"