Advertisment

Exclusive நிஜ சிறுத்தை இவர்தான்யா! கொரோனாவை வென்ற 62 வயது கண்ணாயிரம் தரும் நம்பிக்கை

நீரிழிவு, ரத்த அழுத்தம் பிரச்னைகளுடன் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளுடன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த விசிக பிரமுகர் மன வலிமை தேவை என்று கூறி மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, 62 year old senior citizen recovers from coronavirus, 62 year old vck functionary recoverd from coronavirus, கொரோனாவில் இருந்து மீண்ட 62 வயது விசிக பிரமுகர், விழுப்புரம், நீரிழிவு ரத்த அழுத்தம் பிரச்னைகள் இருந்தாலும் கொரோனாவை வென்ற 62 வயது நபர், 62 year old man diabetic with blood pressure, 62 year old man diabetic with blood pressure, villupuram govt medical college hospital, senior citizen recovers from coronaviurs

coronavirus, 62 year old senior citizen recovers from coronavirus, 62 year old vck functionary recoverd from coronavirus, கொரோனாவில் இருந்து மீண்ட 62 வயது விசிக பிரமுகர், விழுப்புரம், நீரிழிவு ரத்த அழுத்தம் பிரச்னைகள் இருந்தாலும் கொரோனாவை வென்ற 62 வயது நபர், 62 year old man diabetic with blood pressure, 62 year old man diabetic with blood pressure, villupuram govt medical college hospital, senior citizen recovers from coronaviurs

நீரிழிவு, ரத்த அழுத்தம் பிரச்னைகளுடன் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்தாகிவிடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளுடன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த விசிக பிரமுகர் மன வலிமை தேவை என்று கூறி மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணாயிரம். இவர் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் விவசாயிகள் அணியில் மாநில துணை செயலாளராக உள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கண்ணாயிரம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டதால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், கண்ணாயிரம் ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மாவட்டத்தின் முதல் நபராகியுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கண்ணாயிரம் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

நீரிழிவு, ரத்த அழுத்த உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர் ஆபத்தை சந்திக்க வேண்டியிருகும் என்ற அச்சம் பொது மக்களிடையே நிலவுகிறது. அத்தகையவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அச்சப்படத் தேவையில்லை மன வலிமையுடன் மீண்டு வரலாம் என்று நம்பிக்கை அளித்துள்ளார் கண்ணாயிரம். ஐ.இ. தமிழ அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது, “நான் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் இருக்கிறேன். நான் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து மக்கள் பணி செய்திருக்கிறேன். தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் அணியில் மாநில அளவில் பொறுப்பில் இருக்கிறேன்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தலைவர் உத்தரவின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடத்தியது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வந்த பிறகு ஓரிரு நாட்களில் உடல் நிலை சரியில்லாமல் போனது.

எனக்கு பசி எடுக்காமல் போனது. ரொம்ப பலவீனமாகி என்னுடைய வேலைகள் எதையும் செய்யமுடியாத நிலை ஆகிவிட்டது. அதன் பிறகு எனது மகன் என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர் ஒரு 3 நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்தார். ஆனால், உடல்நிலை சரியாகவில்லை. இன்னும் மோசமாகிக்கொண்டிருந்தது.

அதற்குப் பிறகுதான் முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜூன் 17-ம் தேதி சென்றோம். அடுத்த நாள் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறினார்கள்.

என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். என்னுடைய மகன் மனைவி இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

எனக்கு ஏற்கெனவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்ததால் உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் ஆக்ஸிஜன் சிகிச்சை அளித்தார்கள்.

மருத்துவமனையில் எனக்கு நல்ல உணவு அளித்தார்கள். சாதம், கீரை, ரசம், முட்டை, சுண்டல், கேழ்வரகு அடை என்று உணவு கொடுத்தார்கள். 20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். டாக்டர்கள் நல்லமுறையில் பார்த்துக்கொண்டார்கள். டாக்டர்கள் சொன்னதை கடைபிடித்தேன். ஒரு வழியாக குணமாகி விட்டுக்கு வந்துவிட்டேன். இப்போது உடல் நிலை நன்றாக இருக்கிறது.

இந்த கொரோனா நோய் யாரையும் பாதிக்க கூடாது. அதற்காக அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பயப்படக் கூடாது. கொரோனா வந்தால், மன வலிமையுடம் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மன வலிமைதான் நோயில் இருந்து குணமடைய பெரும் துணையாக இருக்கும்.” என்று கூறினார்.

62 வயதான கண்ணாயிரம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தது குறித்து, அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஆர். குந்தவை தேவி ஊடகங்களிடம் கூறியதாவது: அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சுத் திணறல் இருந்தது. ஆரம்பத்தில், அவருக்கு ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 15 லிட்டர் ஆக்ஸிஜனை வழங்கக்கூடிய முகக் கவசம் பொருத்தப்பட்டு இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மருத்துவமனைக்கு அதிக ஆக்ஸிஜனை அளிக்க கூடிய (எச்.எஃப்.என்.சி இயந்திர உதவி அளிக்கப்பட்டது.

இந்த எச்.எஃப்.என்.சி இயந்திரம் நிமிடத்திற்கு 75 லிட்டர் ஆக்ஸிஜனை வழங்கும். ஒரு சாதாரண மனிதனுக்கு நிமிடத்திற்கு 250 மில்லி ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் செயல்பாடு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு அதிக ஆக்ஸிஜன் அளிப்பது தேவையாக உள்ளது.

அவர் 5 நாட்கள் எச்.எஃப்.என்.சி உதவியுடன் இருந்த பிறகு, அவருடைய உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கும் அளவை நிமிடத்திற்கு 40 லிட்டர் என்று குறைத்தோம். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவக் குழு அவருக்கு இன்சுலின் கொடுத்தது. மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சையால் அவர் குணமடைந்துள்ளார்.

தற்போது எங்களிடம் ஒரு எச்.எஃப்.என்.சி கருவி மட்டும்தான் உள்ளது. விரைவில் மேலும் 10 கருவிகளைப் பெற உள்ளோம்.” என்று டீன் குந்தவை தேவி கூறினார்.

டாக்டர்களின் சிகிச்சையாலும் மன வலிமையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வந்துள்ளதாக கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Villupuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment