coronavirus Coimbatore lockdown restrictions and relaxations : கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கோவையில் புதிய கொரோனா நோய் தொற்று பதிவு செய்யப்படாத நிலையில் ஆங்காங்கே கடைகள் திறக்கப்பட்டு, வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கடைகளில், மக்கள் மூலமாக நோய் தொற்று பரவக் கூடாது என்பதை மனதில் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடை உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கோவையில் 146 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணிக்கடைகள்
கோவையில் துணி மற்றும் உடைகள் தொடர்பான கடைகள் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, பீளமேட்டில் இருக்கும் தினேஷ் க்ளாத்திங் செண்டருக்கு ஒரு விசிட் அடித்தோம். ஒரு வாரத்திற்கு முன்பாகவே கடையை திறந்துவிட்டோம் என்று கூறும் கடையின் உரிமையாளர், செருப்பு அணிந்து கடைக்குள் வர முழுவதுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சானிட்டைசர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கோவையில் இருக்கும் கும்கி பயிற்சி மையம்? மலைமலசர் வாழ்வில் இடம் பெற்ற யானை வளர்ப்பு!
கடையின் நுழைவு பகுதியிலேயே, காலால் அழுத்தி, சானிட்டைசர் பெறுவதற்கு செட்-அப் ஒன்றை வைத்துள்ளார். கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வருகின்றார்களா என்று கேட்ட போது, மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து நிறைய அச்சம் இருக்கிறது. அதனால் நிறைய பேர் கடைக்கு வருவதில்லை என்று கூறியுள்ளார். சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய போது, இங்கு ஆயிர கணக்கான கடைகள் மிகவும் குறுகிய இடங்களில் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 5 அல்லது 6 வாடிக்கையாளர்கள் வந்தால் கொஞ்சம் சிரமமான காரியம் தான் கூறினார்.
கோவை பழமுதிர் நிலையம்
பின்னர், பழமுதிர் நிலையம் சென்றோம். அங்கு, வெளியில் இருந்து கொண்டு வரும் கைப்பைகளுக்கு அனுமதி கிடையாது. கையில் பர்ஸ் மட்டும் செல்ஃபோனுக்கு மட்டுமே அனுமதி. நிச்சயமாக முகக்கவசம் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. கட்டிடத்திற்குள் நுழையும் போதே, முதல் தளத்தில், சானிட்டைஸர் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வாங்கி வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க : சூப்பர் புயல் ‘உம்பன்’ மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது
ஏன் என்று கேட்கும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் “இங்கு தினமும் 100 கணக்கானோர் வந்து செல்கின்றனர். யாராவது ஒருவருக்கு கொரோனா என்றாலும், மற்ற நபர்களை தனிமைப்படுத்தவும், ட்ராக் செய்யவும், அரசுக்கு இது உதவும். அந்த காரணத்தால் இந்த ஏற்பாடு” என்று கூறினார். இங்கும் சானிட்டைஸர் வழங்குகிறார்கள். அதே நேரத்தில் கடைகளுக்கு வரும் மக்களின் உடல் வெப்ப நிலையும் இங்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
லாக்டவுனின் நான்காம் கட்டம் வரை, உணவுப் பொருட்கள் விற்பனை மையம் என்பதால் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது பழமுதிர் சோலை. ஆனால் அங்கே பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணிக்கு வந்துள்ளனர். முன்பு போல் “பிஸியாக” இயங்காத காரணத்தால் ஒரே நேரத்தில் அனைவரும் பணிக்கு வந்தால் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை, என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நல்ல வேலையாக இங்கு யாரையும் பணியில் இருந்து நீக்கிவிடவில்லை. கொரோனா நோய் தொற்று யாரிடம் இருந்து பரவுகிறது என்பதை அறிந்து கொள்வதே சிரமாக இருக்கின்ற காரணாத்தால், ஒரு முறை வாங்கிய பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர் கடை நிர்வாகிகள். அதே போன்று அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொட்டிக் ஷாப்புகள்
திருமணங்களுக்கு தேவையான ஆடைகளை தயாரிப்பதற்காகவே கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொட்டிக் ஷாப்புகள் செயல்பட்டு வருகிறது. திருமணங்கள் போன்றவை தற்போது நடைபெறாத காரணத்தால் பல்வேறு கடைகளிலும் ஷாப்புகள் காற்று வாங்குகிறது. இங்கு ஆடைகள் வடிவமைக்க, எம்ராய்டரி பணிகள் மேற்கொள்வதற்காக ஆயிர கணக்கான மேற்கு வங்கத்தினர் இங்கே குடியிருந்து வருகின்றனர். அவர்களில் பலருக்கும் ஒரு மாத சம்பளத்தில் 50% தொகையை சம்பளமாக பொட்டிக் கடை நிர்வாகிகள் வழங்கியிருப்பதால் பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி விட்டினர் என்கிறார், கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிரபலமான பொட்டிக் ஷாப்பில் பணியாற்றும் பெயர் கூறவிரும்பாதா மேற்பார்வையாளர். நாள் ஒன்றுக்கு 10 முதல் 20-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை எடுப்போம். ஆனால் இன்று ஒரே ஒருவர் மட்டுமே வந்தார் என்று கூறுகிறார்.
மேலும் படிக்க : எங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத்? கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை!
நர்சரிகளில் நிலைமை என்ன?
நர்சரிகளும் வழக்கம் போல இயங்கத் துவங்கியுள்ளன. ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்கிறார் ரோஜா நர்சரி கார்டனின் உரிமையாளர். இரண்டு மாதங்களாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், புதிய செடிகளை வாங்குவதற்கு பெங்களூரு செல்ல இயலாத நிலை உருவானது என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட வகை ரோஜாக்கள், பூச்செடிகள் வாங்குவதற்கு கர்நாடகாவிற்கு உள்ளே செல்ல வேண்டும். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லாத காரணத்தால் தளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, மற்றும் ஓசுர் பகுதிகளில் இருந்து செடிகளை வாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் எங்கும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என்றும், முகக்கவசங்கள் அணிவதில்லை என்றும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “
கோவை அவிநாசி சாலையும் வழக்கம் போல் இயங்க துவங்கியுள்ளது. ஆனாலும் 7 மணிக்கு மேல் மக்கள் நடமாட தடை நீடிப்பதால், தெருக்களில் 06:30 மணிக்கு மேல் ஆட்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.