Advertisment

மதுரை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர்... சென்னைக்கு வெளியே கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள்

சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, no need fear to people on coronavirus, need awareness to people on coronavirus, கொரோனா வைரஸ், கமல செல்வராஜ் கட்டுரை, மக்களுக்கு தேவை பயமுறுத்துதல் அல்ல, மக்களுக்கு தேவை விழிப்புணர்வு, no need threaten to people, covid-19, dr kamala selvaraj article, kamala selvaraj article, covid-19, kamala selvaraj, corona virus

coronavirus, no need fear to people on coronavirus, need awareness to people on coronavirus, கொரோனா வைரஸ், கமல செல்வராஜ் கட்டுரை, மக்களுக்கு தேவை பயமுறுத்துதல் அல்ல, மக்களுக்கு தேவை விழிப்புணர்வு, no need threaten to people, covid-19, dr kamala selvaraj article, kamala selvaraj article, covid-19, kamala selvaraj, corona virus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 3500+ கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில்  மேலும் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 63 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொரொனா பாதிப்பால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு 6வது கட்ட ஊரடங்கை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழந்தவர்க்ளின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

அதன் படி, தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 91 கொரோனா வைர பரிசோதனை மையங்களில் இன்று 30,571 பேருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொரொனா பாதிப்பால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,533ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3வது நாளாக 2,000ஐ கடந்து பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னயை அடுத்து அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 297 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 226 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 178 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 147 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 111 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 77 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவரக்ளின் எண்ணிக்கை 39,856 ஆக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment