கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை தயார் செய்யும் சென்னை மாநகராட்சி!

சராசரியாக 1,500 முதல் 2,000 பேர் வரை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

By: Updated: June 19, 2020, 10:46:58 AM

Coronavirus treatment : சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்கள் விடுதிகளை கொரோனா மையமாக மாற்றுவதாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தினமும் சராசரியாக 1,500 முதல் 2,000 பேர் வரை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பகள், மற்றும் ரயில் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5 மாணவர் விடுதிகளை சென்னை மாநகராட்சிக்கு வரும் ஜூன் 20 ம்தேதி ஒப்படைக்க வேண்டுமென கமிஷனர் ஜி. பிரகாஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இல்லையேல் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியேற முயலும் மக்கள்; ஸ்தம்பித்த செங்கல்பட்டு – வாகனங்கள் பறிமுதல்

இதுக் குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஓரிரு நாட்களில் எப்படி மாணவர்கள் விடுதிகளை ஒப்படைக்க முடியும் என்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் அவர்களது உடமைகள் பூட்டப்பட்ட மாணவர் விடுதிகளின் அறைகளில் இருக்கிறது, அவற்றை மாணவர்கள் அனுமதியின்றி எப்படி திறந்து விடுதிகளை மாநகராட்சிக்கு வழங்க முடியம்” என தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus treatment chennai corporation asking anna university hostel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X