சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகளை பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பதவி பிரமாணம் செய்துள்ளார்.
விக்டோரியா கவுரி, பாலாஜி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய வழக்கறிஞர்கள்; மற்றும் கலைமதி, திலகவதி ஆகிய மாவட்ட நீதிபதிகள் என்று ஐந்து நபர்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி நடந்த உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க ஒன்றிய அரசின் கொலிஜியம் பரிந்துரைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று பிரமாணம் செய்யப்பட்ட ஐந்து புதிய நீதிபதிகளுடன் சேர்த்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.