உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு எதிராக, நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் பதிவேற்றிய தரைக்குறைவான வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களைத் தடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பீகார் தேர்தல் உணர்த்தும் 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன?
"முன்னாள் நீதிபதி தொடர்ந்து பொது / சமூக ஊடக தளங்களில் இந்த வகையான கணக்கிட முடியாத அளவுக்கு செய்திகளை பதிவேற்றியிருக்கிறார். இது நிறுவனத்தை முற்றிலுமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வகையான சலசலப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கும் , குறிப்பாக பெண்களுக்கும் இது அசெளகரியத்தை ஏற்படுத்தும் என அந்த பெஞ்ச் மேலும் கூறியது. நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சில் அளித்த மனுவில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
பீகாரின் முதல்வராக பதவி ஏற்பாரா நிதீஷ்? பாஜகவின் நிலைப்பாடு என்ன?
இதைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை, சமூக வலைதளங்களில் கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை முடக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை, டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”