/tamil-ie/media/media_files/uploads/2017/09/senthil-balaji-1.jpg)
senthil balaji
ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.எல்ஏ-க்களில் ஒருவர் செந்தில் பாலாஜி. தற்போது எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராககவும் இருந்தார்.
அந்த சமயத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி மோசாடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 95 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் மீது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்திருந்தார்.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த மாதம் 27-ம் தேதி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை அரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட இருப்பதாகவும், எனவே இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதைதொடர்ந்து மனு மீதான விசாரணையை 3-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரையில் செந்தில் பாலாஜியை போலீஸார் கைது செய்தற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று(செவ்வாய் கிழமை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, செந்தில் பாலாஜி, அன்னராஜ் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us