Advertisment

அசல் ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்ற உத்தரவு இன்று அமல் இல்லை: தமிழக அரசு பதில்

வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Driving licence, Madras high court, vehicles,

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற தமிழக அரசின் உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமத்தை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி கருத்து தெரிவிக்கும்போது, வானக ஓட்டுநர்கள் தங்களுடன் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139-ன் படி ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க கட்டாயம் இல்லை. அசல் உரிமத்தை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற தமிழக அரசின் உத்தரவு என்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தார். மேலும், விபத்துகளைத் தடுக்க பல்வேறு வழி முறைகள் இருக்கும் நிலையில், அரசு இதனை தேர்வு செய்தது ஏன் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் விளக்கத்தை பெற்றுத் தர கால அவகாசம்கோரினார். இதையடுத்து, பிற்பகல்  விளக்கம் அளிக்குமாறு நீதிபதி அவகாசம் வழங்கினார்.

இந்த நிலையில், பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வியய் நாரயணன் ஆஜராகி தெரிவிக்கும்போது, சிலர் அசல் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், ஜெராக்ஸ் மூலமாக தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வாகன சோதனையின் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், வாகன ஓட்டியிடம் அசல் உரிமத்தை அந்த சமயத்திலோ அல்லது அடுத்த நாளிலோ சம்பத்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் அளிக்க உத்தவிடலாம். மழை காலங்களில் அசல் ஓட்டுநர் உரிமங்களை பாதுகாப்பு என்பது வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருந்து வருகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை ஏன் அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், தற்பேதைய நவீன காலத்தில் ஓட்டுநர் உரிமத்தை பாதுகாப்பது என்பது எளிதானது தான். சின்ன அடையாள அட்டைபோன்று தான் இருப்பதால், அதனை பாதுகாப்பது என்பது எளிதானது தான் என்றார்.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், உயர்  நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வில் அசல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தடை விதிக்க வேண்டாம். அசல் ஓட்டுநர் உரிமம் கட்டயாமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை இன்று அமல்படுத்தவில்லை. என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் செவ்வாய் கிழமை வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment