ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நாம நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்..
கொரோனா' வைரஸ் அச்சுறுத்தல் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தண்ணீர் அவசியம் அறியாமல் பலரும் வீணடித்து வருகின்றனர்; ஒவ்வொருவரும் 25 வினாடிகள் தண்ணீர் குழாயை திறந்து வைத்திருந்தால், எவ்வளவு வீணாகும் என யோசித்துப் பார்த்து, தண்ணீர் சிக்கனத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று, நம் முன் மிகப்பெரிய சவாலாக கொரோனா உள்ளது. இந்நேரத்தில் தண்ணீர் பஞ்சம் போன்ற சிக்கல், ஒருபோதும் வந்துவிடக் கூடாது. இதனை கருத்தில் கொண்டு, தண்ணீரை தேவையான அளவு மட்டும், பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
'கொரோனா' தொற்று பாதிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய, 21 நாள் முடக்கத்தின் காரணமாக, 80 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மொத்தத்தில் இழப்பு, 6.3 - 7.2 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்.இந்த மதிப்பீடு, நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான, 140 - 150 லட்சம் கோடி ரூபாய் என்பதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், முடக்கம் என்பது, 21 நாட்கள் என்பதை தாண்டி, 30 அல்லது 60 நாட்கள் வரை நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இழப்பு...பேரிழப்பு
‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளன. ‘பேடிஎம், அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், அத்தி யாவசியமற்ற பொருட்கள் விற்பனையை நிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளன
நல்ல முடிவு..
திருப்பூர் நகரப்பகுதியில், வேப்பிலை காப்பு கட்டியும், மஞ்சள் நீர் தெளித்தும், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் விற்கப்பட்டன .ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐந்து நபர்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற மக்களும், பேச்சுலர்களும், அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டனர். மருந்துகடைகள், சிறிய மளிகை கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. ரோட்டோரமாக, சிறிய காய்கறி கடைகளும், இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. காய்கறி கடைக்காரர்கள், வேப்பிலையை வைத்து காப்பு கட்டியிருந்தனர்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.