Actor Arjun Tamil News: தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகரான வருபவர் நடிகர் அர்ஜூன். தற்போது சில முக்கிய இயக்குநர்களின் படத்தில் நடித்துவரும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். விக்ராந்த், நந்தா, நாராயண், இனிகோ பிரபாகர், உமாபதி, சரண், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, ஐஸ்வர்யா கிருஷ்ணன், காயத்ரி, இந்திரஜா சங்கர், பெசன்ட் ரவி மற்றும் வி.ஜே. பார்வதி ஆகியோர் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோ ஆப்பிரிக்க தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில், நிகழ்ச்சிக்கான இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விஜய லட்சுமி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த நடிகர் அர்ஜுனுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜூன் தனது பதிவில், நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நான் நலமாக உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ள மறக்காதீர்கள். ராம பக்த ஹனுமான் கி, ஜெய்!” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தொற்று, தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் பரவியுள்ள இந்த தொற்றுக்கு இதுவரை ஒருவர் பலியாகியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை தளர்வுகளுடன் நீட்டித்துள்ளது குறிபிடித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“