Advertisment

Crazy Mohan Death: கிரேசி மோகன் மறைவு : செவ்வாய்க்கிழமை இறுதிச்சடங்கு

Crazy Mohan No More: எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக, சென்னையில் காலமானார்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crazy mohan, crazy mohan Death, crazy mohan No More, கிரேசி மோகன் மரணம்

crazy mohan Death, கிரேசி மோகன் மரணம்

Crazy Mohan passes away: எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக, சென்னையில் இன்று ( ஜூன் 10ம் தேதி) காலமானார்.

Advertisment

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்திவந்தார். இதோடுமட்டுமல்லாது, சின்னத்திரை நாடகங்களுக்கும் வசனம் எழுதி வந்தார். 30 நாடகங்கள், 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

Crazy Mohan No More: கிரேசி மோகன் மரணம்

இஞ்ஜினியரிங் பட்டதாரியான கிரேசி மோகன், கிண்டி இஞ்ஜினியரிங் கல்லூரியில், 1972ம் ஆண்டு நடந்த கல்லூரிகளுக்கிடையேயான நாடக போட்டியில், இவரின் வசனத்திலான கிரேட் பேங்க் ரோப்பரி நாடகம் பெரும்வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதை, நடிகர் கமல்ஹாசனிடமிருந்து கிரேசி மோகன் அப்போது பெற்றார்.

இவரது வசனத்திலான 30க்கும் மேற்பட்ட நாடகங்கள், இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் 6,500க்கும் மேற்பட்ட முறை மக்களுக்காக நடத்தப்பட்டுள்ளன. இவரின் படைப்பான சாக்லேட் கிருஷ்ணா, நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளது.

சினிமாவில் காலடி : இயக்குனர் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம், சினிமாவில் வசனகர்த்தாவாக கிரேசி மோகன் அறிமுகம் ஆனார்.

நடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார்.

இவரது கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professinal excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

Live Blog

crazy mohan No More: கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்திவந்தார்.



























Highlights

    20:49 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : நாளை (ஜூன் 11) இறுதிச்சடங்கு

    கிரேசி மோகன் மறைவை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு நாளை ( ஜூன் 11ம் தேதி) பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19:59 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல்

    கிரேஸி மோகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது கிரேஸி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    19:20 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : முதல்வர் பழனிசாமி இரங்கல்

    கிரேசி மோகன் மறைவு, தமிழ் நாடக துறைக்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் பழனிச்சாமி இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளார்.

    18:41 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : டிடிவி தினகரன் இரங்கல்

    கிரேசி மோகன் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளதாவது, புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான திரு.கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன். 40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய திரு.மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    17:46 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

    நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்  தெரிவித்துள்ளார்.

    நகைச்சுவை நாடக ஆசிரியராகவும், கதை - வசன கர்த்தாவாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கிரேஸி மோகன் - என அவர் மேலும் கூறியுள்ளார்.

    17:39 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் ஒரு மேதை : குஷ்பு புகழாரம்

    கிரேசி மோகன் ஒரு மேதை ; ஒரு பாரம்பரியத்தை விட்டு சென்றிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

     

    17:04 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மறைவு : டாக்டர் அன்புமணி இரங்கல்

    கிரேசி மோகன் மற்றும் கிரிஷ் கர்னாட் மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளதாவது,  இந்தியா, இரண்டு தலைசிறந்த திரைக்கதை எழுத்தாளர்களை இழந்துள்ளது. அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் மறைவு, ஈடு செய்யமுடியாத இழப்பு என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

    16:39 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன்-கமல் காம்பினேசன்

    நடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார்.

    16:30 (IST)10 Jun 2019

    முதல்முறையாக அழுகிறோம் ; நீங்கள் இல்லாததால் : நடிகர் சதீஷ் இரங்கல்

    என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து... என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து... என் மாதாவாக... பிதாவாக... குருவாக... இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்......என்று நடிகர் சதீஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    15:58 (IST)10 Jun 2019

    கிரேமி மோகன் மறைவு : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

    கிரேஸி மோகனின் இறப்பு மனவேதனை அளிக்கிறது; அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்  என்று முன்னாள் மத்திய  அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    15:42 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் நகைச்சுவை ஞானி : நடிகர் கமல்ஹாசன்

    கிரேசி மோகன் நகைச்சுவை ஞானி. அவரது நட்பின் அடையாளமாக, அவரது நெற்றியில் கைவைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தேன். எங்களது நட்பிற்கு முடிவு என்பதே இல்லை. ஆள் இருந்தா தான் நட்பா?.... கிரேசி மோகனின் நகைச்சுவை, அவரது ரசிகர்கள் மூலம் வாழும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    15:31 (IST)10 Jun 2019

    நகைச்சுவை உலகில் வெற்றிடம் : மனோபாலா

    கிரேசி மோகனின் மறைவு, நகைச்சுவை நாடக உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

    15:30 (IST)10 Jun 2019

    500 முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்ட சாக்லேட் கிருஷ்ணா நாடகம்

    கிரேசி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றப்பட்டு, மக்களை மகிழ்வித்துள்ளது.

    15:27 (IST)10 Jun 2019

    மக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேசி மோகன் : இயக்குநர் சரண்

    மக்களின் இதயங்களுக்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேசி மோகன்.  ஜோக்கராகவே தூங்கும் கிரேசி மோகன், ஜோக்கராகவே எழுந்திருப்பார்.  மக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து தந்தவரின் இதயம் நின்றுபோனது என்று இயக்குநர் சரண், தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

     

    15:06 (IST)10 Jun 2019

    கிரேசி மோகனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது : இயக்குநர் வசந்த்

    கிரேசி மோகனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இ்ன்றைய சூழலில், அவரது இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்று இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார்.

    15:06 (IST)10 Jun 2019

    crazy mohan No More: பிரபலங்கள் இரங்கல்

    கிரேஸி மோகனின் புகழ் திரையுலகில் என்றும் மறையாது என நடிகர் தியாகு கூறியிருக்கிறார். நகைச்சுவை நடிகர் சார்லி கூறுகையில், ‘மக்களுக்கு நல்ல தகவல்கள் சென்றடையும் வகையில் நகைச்சுவைகளை எழுதியவர் கிரேஸி மோகன்’ என்றார்.

    15:03 (IST)10 Jun 2019

    மிகச்சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் : நாசர்

    மிகச்சிறந்த நண்பர், மனிதரை இழந்துவிட்டேன். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தனித்துவமிக்க கிரேசி மோகனின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது  என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)10 Jun 2019

    மேடைநாடக உலகிற்கு இன்று கறுப்பு நாள் : நடிகர் மோகன்ராம்

    கிரேசி மோகன் மறைந்த இந்த நாள், மேடைநாடக உலகிற்கு கறுப்பு நாள் என நடிகர் மோகன்ராம் தெரிவித்துள்ளார்.

    15:00 (IST)10 Jun 2019

    இழப்பு ஈடு செய்ய முடியாதது : ராதாரவி

    கிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் . அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என நடிகர் ராதாரவி தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    14:32 (IST)10 Jun 2019

    நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு : கோவை சரளா

    கிரேசி மோகன் மறைவு, நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.

    14:31 (IST)10 Jun 2019

    கிரேசி மோகன் மரணம் : பிரபலங்கள் இரங்கல்

    கிரேசி மோகன் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    14:29 (IST)10 Jun 2019

    மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை

    கிரேசி மோகன் மரணமடைந்து விட்டதாக சமூகவலைதளங்களில் செய்திபரவிய நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது குடும்ப நண்பர்கள் தெரிவித்து வந்தனர். 2 மணியளவில், அவரின் மரணத்தை, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனை உறுதி செய்தது.

    crazy mohan Death: கிரேஸி மோகன் கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    தமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professinal excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார்

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment