Advertisment

கவர்னருடன் தலைமை செயலாளர் பேசியது என்ன?

தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தலைமை செயலாளரிடம் கேட்டறிந்துள்ளார்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
கவர்னருடன் தலைமை செயலாளர் பேசியது என்ன?

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று மதியம் நடைபெற்றுள்ளது.

Advertisment

பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக ஆளுநரை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று மதியம் 11.50 மணியில் இருந்து 1.10 மணி வரை இந்த சந்திப்பு நடந்துள்ளது. சந்திப்பின் போது, சேகர் ரெட்டி விவகாரத்தில் வருமான வரித்துறை தமிழக தலைமை செயலாளரிடம் பட்டியலை சமர்பித்தது, ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பு மாற்றம், பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கவர்னரோடு தலைமை செயலாளர் விவாதித்துள்ளார். இந்த சந்திப்பு மிக ரகசியமாக நடந்ததாகவும், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தலைமை செயலாளரிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment