ஓசூர் அருகே விவசாயி ஒருவருக்கு 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அவர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவரது வீட்டில் இருக்கும் அனைவரும் விவசாயம் சார்ந்த தொழிலைதான் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் வேலைக்கு வெளியே சென்றுவிடுவார்கள்.
2 மாதங்களுக்கு ஒருமுறைதான் அவரது வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்துவார்கள். இந்நிலையில் மின் கட்டணம் ரூ. 100-க்கு அதிகமாக வந்ததில்லை என்று கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இவரது கைபேசி எண்ணுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் இவரது மின் கட்டணமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கடேஷ், மின்வாரிய அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ரீடிங் பதிவு செய்யும்போது, தவறுதலாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் குமார் விளக்கம் அளித்துள்ளார்.