Advertisment

மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 நிவாரண உதவி - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கொரோனா ஊரடங்கு காலத்தில் மீன் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதும், மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால், மீனவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
daily relief fund for fisherman covid 19 pandemic madras high court tn govt

daily relief fund for fisherman covid 19 pandemic madras high court tn govt

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காலத்தில் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சிறிய படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும், ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு தலா 500 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்க கோரியும், மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரத்தில் காணாமல் போன கொரோனா நோயாளி; ஒரு வாரத்தில் கண்டுபிடிப்பு; பரபரப்பு பின்னணி

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மீன் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதும், மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால், மீனவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment