பணத்திற்காக ஜெயலலிதாவை கொலை செய்ய தீபக் உடந்தை... இல்லத்தில் எங்களை அடித்து உதைத்தனர்: தீபா பகீர்

திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு எங்கள் மீது தாக்குதல்

போயஸ் கார்டனில் இருந்து தீபா அவரது கணவர் மாதவனுடன் வெளியோ வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடன் அவர் கூறியது அதிர்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபக் தான் போயஸ் கார்டனுக்கு வர அழைப்பு விடுத்தார். ஆனால், இங்கு வந்ததும் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து அவர்கள் எங்களை அடித்து உதைத்தனர். திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனக்கும், எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு தேவை.

சொந்த அத்தை என்று கூட பார்க்காமல் ஜெயலலிதாவை கொலை செய்ததில் தீபக்கும் உடந்தையாக இருந்திருக்கிறார். தீபக் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

×Close
×Close