போயஸ் இல்லத்திற்கு தீபா திடீர் வருகை... போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை போயஸ் இல்லத்திற்கு திடீர் வருகை தந்தார். அப்போது போயஸ் இல்லத்திற்குள் நுழைய தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸாருடன் அவர் வாக்குவதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போயஸ் கார்டனுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், போலீஸாரின் இந்த செயலை கண்டித்து செய்தியார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தீபா கூறும்போது: தனது சகோதரர் தீபக் தான் என்னை அழைத்தார். அவர் அழைப்பு விடுத்ததின் அடிப்படையிலேயே நான் போயஸ் கார்டனுக்கு வந்தேன் என்று கூறினார்.

மேலும், போயஸ் இல்லத்திற்கு உள்ளே செல்லவிடாமல் தங்களை டிடிவி தினகரன் தரப்பினர் தடுப்பதாக தீபா தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close