தீபாவளிக்கு முன்பதிவு… தென்மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் காலி!

தீபாவளி பண்டிகையையொட்டி அக்., 16ம் தேதிக்கான தென் மாவட்ட ரயில்களின் முன்பதிவு, அரைமணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன. இந்த ஆண்டில், அக்., 18 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான மக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். பண்டிகை நாட்களில் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், முன்பதிவில்லாமல் சாத்தியம் இல்லை என்றே கூறலாம். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி […]

Railway,Special trains, Chennai and Tirunelveli,

தீபாவளி பண்டிகையையொட்டி அக்., 16ம் தேதிக்கான தென் மாவட்ட ரயில்களின் முன்பதிவு, அரைமணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.

இந்த ஆண்டில், அக்., 18 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான மக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். பண்டிகை நாட்களில் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், முன்பதிவில்லாமல் சாத்தியம் இல்லை என்றே கூறலாம். ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி உள்ளது. அதன்படி, அக்., 16ம் தேதிக்கான ரயில் பயண முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

இதனையடுத்து, தென்மாவட்டங்களுக்கான ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய அரைமணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் காலியானது. குறிப்பாக 90 சதவீத பேர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Deepavali rail reservation train get houseful in 30 mins for sothern district

Next Story
தமிழகத்தில் நடப்பது கொள்ளையர்களின் ஆட்சி: ராமதாஸ் குற்றச்சாட்டுRamadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X