/indian-express-tamil/media/media_files/2025/10/10/diwali-special-train-online-ticket-booking-irctc-2025-10-10-13-20-15.jpg)
Deepavali special train KSR Bengaluru to Chennai train Chennai to Bangalore special train Diwali train tickets
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயணத்தை எளிதாக்கும் வகையிலும், கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். பெங்களூரு (KSR Bengaluru) மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே (SWR) ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி
ரயில் எண் 06255, அக்டோபர் 18, 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 8:05 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவில் புறப்பட்டு, பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மறுமார்க்கமாக, ரயில் எண் 06256, அக்டோபர் 18, 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மாலை 4:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவை வந்தடையும்.
இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் யஷ்வந்த்பூர், கே.ஆர். புரம், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள் இந்தச் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.