டெங்குவால் உயிரிழப்பு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு – ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும்

By: Updated: September 26, 2019, 03:18:25 PM

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலை உள்ளதாகவும் எனவே டெங்கு பாதிப்பை கட்டுபடுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றமத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில் சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும், அதில் அரசு மெத்தனபோக்கை காட்டுவதும் தான் காரணமென சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், சுகாதார துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க – தீயாய் பரவுகிறது டெங்கு காய்ச்சல் : மக்களே கவனம்…

Dengue Case at Chennai High Court

மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் என்.சேஷசாயி அமர்வில் முறையீடு செய்தார். ஆனால், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பிறகு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dengue at tamil nadu dengue disease chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X