டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவிவருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடுமுழுவதும் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 87 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி, இந்தியாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 151 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 18 ஆயிரத்து 908 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 235 பேரும், தமிழகத்தில் 12 ஆயிரத்து 945 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பை பார்க்கும் போது, நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பினார் தமிழகத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், கேரளாவில் 35 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மத்திய அரசு புதிய புள்ளி விவபரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை”: அமைச்சர் விஜயபாஸ்கர்