Advertisment

தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேகம் தடுத்து நிறுத்தம்: மனமுடைந்த கிராமத்தினர் தற்கொலை முயற்சி

மனமுடைந்த கிராமத்தினர் சிலர் கோயில் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

author-image
abhisudha
New Update
Dharmapuri

Police

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பமரத்தூர் கிராமம் உள்ளது. இங்கு மாரியம்மன் கோயிலில்13 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடக்க இருந்தது.

Advertisment

ஆனால் சில மர்ம நபர்கள் கும்பாபிஷேக விழாவை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கிராமத்தினர் சிலர் கோயில் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வேப்பமரத்தூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராமத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கோயில் கும்பாபிஷேக விழாவை நடக்க விடாமல் தடுத்ததால், ஊர் மக்கள் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment