Advertisment

வைர விழா அழைப்பிதழ்: கருணாநிதியிடம் கொடுத்தார் ஸ்டாலின்

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைர விழா அழைப்பிதழ்: கருணாநிதியிடம் கொடுத்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நல குறைவு காரணமாக ஒய்வு எடுத்து வருகிறார். அவருடைய 94வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisment

அதோடு கருணாநிதி முதன் முதலாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 60 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு எந்த தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவியது இல்லை.

சட்டசபைக்குள் கருணாநிதி நுழைந்து இந்த ஆண்டோடு 60 வருடம் ஆகிறது. கருணாநிதி சட்டசபைக்குள் நுழைந்து பொன்விழாவையும், அவரது பிறந்த நாளையும் திமுக சார்பில் ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடுகிறார்கள். இதற்கான அழைப்பிதழை, ஸ்டாலினும் துரைமுருகனும் நேற்று கருணாநிதியிடம் வழங்கினார்கள். இந்த புகைப்படம் முரசொலியில் வெளியாகியுள்ளது.

உடல் நலம் குன்றியிருக்கும் கருணாநிதி விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை.

Dmk Stalin Karunanithi Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment