Advertisment

கே.பி.முனுசாமி, மாஃபாய் மாறுபட்ட கருத்து : முதல்வரின் அறிவிப்பால் ஓ.பி.எஸ். அணியில் குழப்பம்

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கே.பி.முனுசாமி, மாஃபாய் மாறுபட்ட கருத்து : முதல்வரின் அறிவிப்பால் ஓ.பி.எஸ். அணியில் குழப்பம்

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கே.பி.முனுசாமி, மாஃபாய் பாண்டியராஜன் ஆகிய இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, இரண்டு மாதங்கள் அதிமுக.வில் பெரிய பிரச்னை இல்லை. கட்சியின் பொதுச்செயலாளராக முடிசூட்டிக்கொண்ட சசிகலா, முதல்வர் பதவியையும் கைப்பற்ற களம் இறங்கியதும்தான், அதுவரை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ தொடங்கினார்.

தனது பிரதான கோரிக்கைகளாக, 1.அதிமுக.வில் இருந்து சசிகலா குடும்பம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 2.ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எடப்பாடி அரசு நிறைவேற்றினால் இரு அணிகளும் இணையும் என அறிவித்தார் ஓ.பி.எஸ்.

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தது, ஓ.பி.எஸ்.ஸும் பங்கேற்ற பொதுக்குழு! அவரை நீக்கும் முடிவையும் பொதுக்குழுதான் எடுக்க முடியும். எனவே ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகள் இணைந்த பிறகு பொதுக்குழுவைக் கூட்டி அந்த நடவடிக்கையை எடுப்போம் என எடப்பாடி தரப்பு கூறுவதை ஓ.பி.எஸ். அணி ஏற்கத் தயாரில்லை.

தவிர, ‘சசிகலா இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு சிறையில் இருக்கும் சூழல் நிலவுவதால் உடனடியாக அவரை நீக்கவேண்டிய சூழல் இல்லை. டிடிவி.தினகரனை நாங்கள் முழுமை0யாக நீக்கி வைக்கிறோம்’ என எடப்பாடி அணி முடிவெடுத்தது. அதன்படிதான் கடந்த 10-ம் தேதி அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகளை கூட்டி, ‘டிடிவி.தினகரன் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது’ என எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ். அணியினர், ‘பாதி தூரம் வந்துவிட்டீர்கள். இன்னமும் சசிகலா நீக்கம் மற்றும் அம்மாவின் மரணம் தொடர்பான விசாரணை குறித்தும் அறிவித்துவிட்டால், உடனே அணிகளை இணைத்துவிடலாம்’ என்றார்கள். இந்தச் சூழலில்தான் ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெ. மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை, ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவோம்’ என இரட்டை அறிவிப்புகளை செய்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் ‘ரெஸ்பான்ஸை’யும், உடனடியாக இரு அணிகளும் இணையுமா? என்பதையும்தான் பலரும் எதிர்பார்த்தனர். ஓ.பி.எஸ். அணியுடன் ஏற்கனவே இணைப்புப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, இந்த அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டதாககூட தகவல்கள் உலவின.

ஆனால் ஓ.பி.எஸ். அணியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளவரான கே.பி.முனிசாமி இது குறித்து தெரிவித்த கருத்துகள், எடப்பாடி தரப்புக்கு ஆயிரம் வாட் அதிர்ச்சி! ‘நாங்கள் வைத்த கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை. சசிகலாவை இன்னும் அவர்கள் நீக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் கேட்ட சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர் எதை செய்ய விரும்பினாரோ, அதை செய்திருக்கிறார். இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை’ என அதிரடியாக கூறியிருக்கிறார் கே.பி.முனுசாமி.

ஆனால் ஓ.பி.எஸ். அணியின் மற்றொரு சீனியரும் முன்னாள் அமைச்சருமான மாபாய் பாண்டியராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் முன்வைத்த 3 கோரிக்கைகளும் (போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றிய நடவடிக்கையையும் சேர்த்து குறிப்பிடுகிறார்) நிறைவேறியிருக்கின்றன. இணைப்புக்கான பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெற வேண்டிய நேரம் இது’ என கூறியிருக்கிறார் மாஃபாய்.

அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ். அணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதையே கே.பி.முனுசாமி, மாஃபாய் ஆகியோரின் நிலைப்பாடுகள் காட்டுகின்றன.

O Panneerselvam K P Munusamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment