திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவி அனிதா மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 4-ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டதுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் நலன் கருதி இந்த கூட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்கள். நீட் தேர்வு விவகாரம், அனிதா தற்கொலை குறித்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார்.
இந்நிலையில், திவாகரன் தெரிவித்த கருத்துக்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "திமுகவின் ஆலோசனை கூட்டத்தில் எனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள். எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து" என்றார்.
முன்னதாக, நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகலாவின் உறவினர் துக்க நிகழ்ச்சியில் டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளது போன்று அதிமுக சிக்கியுள்ளதாகவும், விரைவில் அதை மீட்போம் என்றும் கூறிய திவாகரன், எனக்கும் தினகரனுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார். ஆனால், தற்போது ஒரே பிரச்னை தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் வேறுபட்ட கருத்தை கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆலோசனைக் கூட்டம்: டிடிவி தினகரன் - திவாகரன் மாறுபட்ட கருத்து
ஒரே விவகாரத்தில் டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ள விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.