சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழகத்தின் முக்கிய பாரம்பரியம் அல்லது சுற்றுலாத் தலங்களின் எந்தவொரு உருவப்படத்தையும் காட்சிப்படுத்தாதது குறித்து தமிழ் திரைப்பட இயக்குனரான டி.ஆர்.கே.கிரண் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் பணியாற்றிய இவர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துவதற்காக சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.
இயக்குனர் கிரண் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, ” தமிழகத்தில் உள்ள படங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மற்ற நாடுகளில் உள்ள முக்கிய இடங்களின் படங்களை நிறுவுவதற்கான அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்”, என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “சென்னை விமான நிலையத்தில், மற்ற நாடுகளின் முக்கிய இடங்களின் படங்களை வைத்துள்ளீர்கள். ஏன்? தமிழகத்தில் சிறந்த இடங்கள் இல்லையா? அல்லது உங்களுக்குத் தெரியாதா? இந்த விமான நிலையம் தமிழ்நாட்டில் இல்லையா? மற்ற நகரங்களில் இப்படி இல்லை, இங்கு மட்டும் ஏன்?” கிரண் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் மட்டுமே பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களை பார்க்க முடியும் என்றும், அப்பகுதியைச் சேர்ந்த பூர்வீக மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிநாட்டினருக்குக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
விரைவில், நெட்டிசன்கள் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்து, இந்த பிரச்சினையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு சென்னை விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கம் பதிலளித்துள்ளது. அதில், இயக்குனரின் கருத்து ஏற்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.