நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை ஒன்றினைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். ஆனால் கடந்த ஆண்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டதாகவும், இந்த கடசியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோர் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிய நடிகர் விஜய், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தவும், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்குமாறு சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பாக விசாணையில் செப்டம்பர் 27-ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எஸ்.ஏ.சந்திசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் விஜயின் மக்கள் இயக்கம் கடந்த கலக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார். எஸ்ஏசியின் இந்த பதில் மனு விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 29-ந தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்ஏ சந்திரசேகர்….
— Babu Lakshmanan (@babulachu2817) September 27, 2021
இதுக்கு ரஜினியே பரவாயில்ல போலிருக்கே
– Fans mind voice#actorvijay #Politics
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ.சந்திரசேகர்
— 🇮🇳 ஷிபின் 🚩 (@shibin_twiz) September 27, 2021
ரெண்டே பேரு சேர்ந்து கட்சி ஆரம்பிச்சி ,
அதுல ஒருத்தன் ராஜினாமா பண்ணி ,
அப்புறம் கட்சியையும் கலைச்சுட்டாங்க
😂😂😂@actorvijay
விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ.சந்திரசேகர்
— Ramya_Mohan (@Ramya_mohan_) September 27, 2021
அப்போ தம்பி விஜய் ஆதரவுடன் அதிபர் முதல்வர் ஆகமுடியதா?
இந்நிலையில் விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil