தன்னிடம் இருந்து கதையை வாங்கிக் கொண்ட இயக்குநர் சுந்தர் சி, அதற்கான தொகையை கேட்டால் ஆள்வைத்து தன்னை மிரட்டுவதாக இயக்குநரும், நடிகருமான வேல்முருகன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல தனியால் தொலைக்காட்சி சேனலில், இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது நந்தினி என்ற நாடகம். இந்த நாடகத்திற்காக கதையானது தன்னுடையது என்று கூறுகிறார் இயக்குநரும், நடிகருமான வேல்முருகன். இந்த கதைக்கு ரூ.50 லட்சம் தருவதாக சுந்தர் சி பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் அந்த பணத்தை கேட்டால் ஆள்வைத்து மிரட்டுவதாக வேல்முருகன் புகார் தெரிவித்தார்.
வேல் முருகன் புகாரில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு பல்வேறு படங்களில் இயக்குநர் சுந்தர் சி-யுடன் பணியாற்றியிருக்கிறேன். என்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட கதைக்கு சுந்தர் சி ரூ.50 லட்சம் தருவதாக கூறியிருந்தார். இயக்குனர் சுந்தர் சி-யை 15 ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்பதினாலேயே, முன்பணம் எதும் பெறாமல் நந்தினி கதையயை கொடுத்திருந்தேன். கதைக்கு 50 லட்சம் என்றும், நாடகத்தில் பணியாற்ற மாதம் ஒரு லட்சம் தருவதாகவும் கூறி நான்கு மாதம் மட்டும் பணம் அளித்தார். 50 லட்சம் குறித்து அவரிடம் கேட்டபோது, மற்றொரு படம் எடுக்கப்போவதாகவும் அதற்கு பின்னர் பணத்தை தருவதாக தெரிவித்தால். இதனால், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரிடம் அழுத்தமாக ரூ.50 லட்சம் கேட்டபோது, அவர் ஆட்களை வைத்து மிரட்டல் விடுத்தார் என்று புகாரில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறும்போது, கதைக்கான பணத்தை சுந்தர் சி-யிடம் கேட்டபோது, அவர் அந்த பணத்தை தரமுடியாது என்றார். மேலும், மோசமான வார்த்தைகளால் திட்டிய சுந்தர் சி, எனக்கு மிரட்டினார். அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்த அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன என்று கூறினார்.