Advertisment

எஸ்.பி.வேலுமணி கையால் இலவச நிலப்பட்டா வாங்கிய மாற்றுத்திறனாளிக்கு நிகழ்ந்த ஏமாற்றமும் வேதனையும்

“அதன்பிறகு ஒருநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது, அதிகாரிகள் எனக்கு நிலம் இல்லை என தெரிவித்தனர்.”,என்கிறார் பழனிச்சாமி.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, minister S.P.Velumani, disabled, welfare schemes,

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அடிக்கடி பங்கேற்கும் நிகழ்ச்சி இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் தான். நிகழ்ச்சிக்காக அமைச்சர், தமிழக அரசை போற்றி பேனர்கள் என நிகழ்ச்சி நடைபெறும் இடமே திருவிழா மையமாக இருக்கும். ஆனால், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதலில் நிலம் வழங்கப்படும் பயனாளிகள் உண்மையில் அதனால் பலன் அடைகிறார்களா என்ற கேள்வி எழுகிறது, மாற்றுத்திறனாளியான பழனிச்சாமியின் குற்றச்சாட்டை கேட்கும்போது.

Advertisment

கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த பழனிச்சாமி, விபத்து ஒன்றில் தன் இரு கால்களையும் இழந்தார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், பழனிச்சாமிக்கு இலவச நிலப்பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பட்டா ஆவணங்கள் மற்றும் சர்வே எண்ணுடன் பலமுறை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று நிலத்தை வழங்குமாறு பழனிச்சாமி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் இனிமேல் தான் நிலத்தை அளந்து எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் அவரை அலட்சியம் செய்ததாக பழனிச்சாமி குற்றம்சாட்டுகிறார்.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ”2013-ஆம் ஆண்டில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்னுடன் சேர்த்து 750 பேருக்கு இலவச நிலப்பட்டா வழங்கினார். ஆனால், ஒவ்வொரு முறையும் எனக்கான நிலத்தை வழங்குமாறு ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றால், அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் தாழ்த்திக் கொண்டே வந்தனர்.

இதையடுத்து, பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இரண்டு முறை சென்று முறையிட்டார். அப்போது ஆட்சியரின் உதவியாளர், அதிகாரிகளுக்கு நிலத்தை அளந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கிறார் பழனிச்சாமி.

“அதன்பிறகு ஒருநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது, அதிகாரிகள் எனக்கு நிலம் இல்லை என தெரிவித்தனர்.”, என குற்றம்சாட்டும் பழனிச்சாமியாம், பெரியநாயக்கன்பாளையம் வரை ஒவ்வொரு முறை சென்று இந்த பிரச்சனையை பின்தொடர இயலவில்லை.

“நான் மட்டுமல்லாமல் என்னோடு வழங்கப்பற்ற மற்ற பயனாளிகளுக்கும் நிலம் வழங்கப்பட்டிருக்க மாட்டாது என நினைக்கிறேன்”, என பழனிச்சாமி தெரிவித்தார்.

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் பலரும் இத்தகைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள் என்றே இந்த சம்பவத்தின் மூலம் கேட்கத் தோன்றுகிறது. அரசு அதிகாரிகள் இம்மாதிரியான பிரச்சனைகளில் அலட்சியம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பழனிச்சாமியின் கோரிக்கை.

Minister S P Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment