தீபாவளி சிறப்பு பஸ்கள் முழு விவரம் : தாம்பரம் பாதையை தவிர்க்க இதர வாகனங்களுக்கு வேண்டுகோள்

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன் முழு விவரம் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Bus Fare Hike, Tamilnadu Government, parties opposed
Bus Fare Hike, Tamilnadu Government, parties opposed

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன் முழு விவரம் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 11,645 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி 15-ம் தேதி 3,063 பேருந்துகளும், 16-ம் தேதி 4,119 பேருந்துகளும், 17-ம் தேதி 4,463 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11,111 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

300 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கவிரும்புவோர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீபாவளி சிறப்புபேருந்து இயக்கம் மாற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு மையங்களும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு என தனித்தனியாக சிறப்பு செயலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்செயலறைகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அண்ணா நகர் (மேற்கு) பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செங்குன்றம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும். சைதாப்பேட்டை நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்திலிருந்து (சைதாப்பேட்டை பணிமனை எதிரில்) புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும்.

தாம்பரம் சானடோரியம், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ்லிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும். பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆற்காடு, தர்மபுரி, ஒசூர் ஆகியஊர்களுக்கு பூவிருந்தவல்லி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூர் மற்றும் இதர வழிதடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் புறப்படும்.

போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் தாம்பரம் – பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி ஊரப்பாக்கம்(கிளாம்பாக்கம்) பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவில்லா எந்த பேருந்தும் புறப்படாது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய, 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு சிறப்பு முன்பதிவு செயலறைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனந்த பத்மநாபன் மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diwali special buses full details request for other vehicles to avoid thambaram route

Next Story
தீபாவளிக்கு மழையில் நனையுமா தமிழகம்? வளி மண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலிமழை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com