கருணாநிதி மறைவுக்கு மாநிலங்களவை இரங்கல் தெரிவித்துள்ளது

DMK Chief Kalaignar Karunanidhi Death : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை இரங்கல் தெரிவித்துள்ளது.

DMK Chief Kalaignar Karunanidhi Death : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 27ம் தேதி முதல் நேற்று 7ம் தேதி வரை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீர் தொற்றால் உடல் உபாதையை எதிர்கொண்டு வந்த அவருக்கு கடந்த 27ம் தேதி இரத்த அழுத்தம் குறைந்தது. இதன் காரணமாக கோபாலபுரத்தில் இருந்து அன்று இரவு காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Karunanidhi Funeral Live Updates: சென்னை வந்தார் மோடி, கருணாநிதிக்கு அஞ்சலி

கடந்த 11 நாட்களாக இவரின் உடல்நிலை பல்வேறு இன்னல்களை சந்தித்தது. கடந்த 6ம் தேதி மாலை இவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை அடைந்தது. 24 மணி நேரம் அவகாசத்திற்கு பிறகே கருணாநிதியின் உடல்நலம் பற்றி உறுதியாக கூற முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. முன்னதாக இரண்டு முறை உடல்நிலை பின்னடைவை எதிர்கொண்டு சீரான நிலையை அடைந்த கருணாநிதி மீண்டும் நலம்பெற்று வர வேண்டும் என்று தொண்டர்கள் பிரார்த்தனைகள் செய்தும், கோஷங்களை எழுப்பியும் ஆதரவு அளித்தனர்.

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆனால், நேற்று மிகவும் மோசமான உடல்நிலையை அடைந்தார் கருணாநிதி. மாலை 6.40 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி 6.10 மணிக்கு காலமானார் என்று அறிக்கை வெளியிட்டது. இவரின் மறைவுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இன்று மாநிலங்களவை மற்றும் மக்களவையும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close