திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை காட்டும் வகையிலான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலடித்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தமிழரசு தனது பேரக்குழந்தையை, கருணாநிதியிடம் காண்பிக்கிறார்.
கொள்ளுப் பேரனைக் கண்ட கருணாநிதி மகிழ்ச்சியில் சிரிக்கிறார். தமிழரசு தனது மகன் அருள்நிதியின் குழந்தையை, கருணாநிதியிடம் காண்பிக்க வந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளு பேரனைக் கண்ட கருணாநிதி, சிரித்து மகிழ்கிறார். இந்த வீடியோவில் தாயாளு அம்மாள், மகள் செல்வி ஆகியோர் உள்ளனர்.