திமுக தலைவர் கருணாநிதி(DMK Chief M.Karunanidhi), குடியரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம் அது.
திராவிடர் கழக கொடி வடிவமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டு இருந்தது. கொடியின் நிறம் கறுப்பு என்று முடிவு செய்யப்பட்டது. அதில் வேறு ஒரு அடையாளத்தை பதிப்பது குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடந்தினர்.
இளைமை துடிப்போடு இருந்த கருணாநிதி, தனது விரலை பிளேடால் கீறி, கறுப்பு நிறத்தின் நடுவில் சிவப்புப் பொட்டு வைத்தார். இருண்டு கிடக்கும் தமிழக வானத்தில் சிவந்த சூரியன் தனது ஒளியைப் பாய்ச்சி வெளிச்சமாக்குவது போல், அது காட்சியளித்தது.
இந்த சிறப்பான எண்ணாம் கருணாநிதிக்கு தோன்றியதும், அவர் சிவப்பு மையை எடுத்துப் பொட்டு வைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் அவர், தனது விரலைக் கீறிப் பொட்டு வைத்ததில் கருணாநிதியின் உணர்வுவை வெளிப்படுத்தியது. தமிழுக்காகவும் தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் அவர் தமது உணர்வாற்றலை வெளிப்படுத்த எந்த சூழலிலும் தயங்கியதேயில்லை.
——————
அண்ணா முதல்வராக இருந்தபோது, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தீ வைத்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது. நிலைமையினைச் சமாளிப்பதற்காகக் கருணாநிதியை அங்கே அனுப்பி வைத்தார், அண்ணா. நெருப்பு நேரத்தை நீர் தெளித்து அணைக்கக் கருணாநிதியால் மட்டுமே முடியும் என்பதை அண்ணா நன்றாகவே உணர்ந்திருந்தார்.
அண்ணாவின் ஆணைப்படி ரயில் நிலையம் சென்ற கருணாநிதி, மாணவர்கள் மத்தியில் புறநானூற்றைப் பொழிகிறார். ஆவேசப் புயல் மெல்லமெல்ல அடங்கி வருகிறது. அப்போது, கருணாநிதியைப் பார்த்து மாணவர்கள், ‘‘இந்தி ஒழிக’’ என்று நீங்கள் சொன்னால்தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று கட்டாயப்படுத்திப்னார்கள். மாணவ பருவத்தில் இருந்தே ‘‘இந்தி ஒழிக’’ எனக் குரல் கொடுத்தவர் கருணாநிதி. அனாலும் அமைச்சர் பொறுப்பிலிருக்கும் இந்திக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதை அறிந்திருந்தார்.
அதே நேரத்தில் மாணவர்களின் மன நிலையையும் அவர் உணர்ந்திருந்தார். உடன், மாணவர்களை நோக்கி, ‘‘இந்தி’’ என உரத்துக் குரல் கொடுத்தார். உணர்ச்சிப் பிழம்பாய் இருந்த மாணவர்கள் ‘‘ஒழிக’’ என பெருங்குரல் எழுப்பினர். மாணவர்களின் உணர்வுடன் தமது உணர்வையும் ஓரே அலைவரிசையில் ஒலிக்கச் செய்து தமது ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் கருணாநிதி.
———————
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த நேரம் அது. தந்தை பெரியார் மறைவின் போது தமிழகமே கண்னீரில் மிதந்தது. எல்லோருடைய இதயங்களிலும் இருள் சூழ்ந்த நிலை துயரம் அழுத்துகிற செஞ்சுடன் கடமையாற்றியவர் கருணாநிதி. ‘‘தந்தை பெரியாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும்’’ என அறிவித்தார். அதிகாரிகள் பதைபதைத்துப் போனார்கள். ‘‘எவ்வித அரசு பொறுப்பிலும் இல்லாத பெரியாருக்கு எந்த அடிப்படையில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கை நிறைவேற்றுவது?’’ என கேள்வி எழுப்பினார்கள். மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்தார்கள்.
கருணாநிதி கலங்கவில்லை. அதிகாரிகளை நோக்கி சட்டென சொன்னார். ‘‘காந்தியடிகள் கூடத்தான் எவ்வித அரசுப் பொறுப்பையும் வகிக்கவில்லை. அவருக்கு எந்த அடிப்படையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவோ அதே அடிப்படையில்தான் தந்தை பெரியாருக்கும் நிறைவேற்றப்படும். ஏனெனில் இது பெரியாரின் அரசு’’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, அதிகாரிகள் அமைதியானார்கள்.