தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழா, சென்னை ராயப்பேட்டையில் சற்றுமுன் தொடங்கியது. இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பிரனாயி விஜயன், டி ராஜா, உமர் அப்துல்லா, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து, விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.