Advertisment

ஆர்எஸ்எஸ் சார்பு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள்; வெடித்த சர்ச்சை

திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது.

author-image
Balaji E
New Update
dmk ministers participate in rss wing sewa bharathi, dmk ministers in sewa bharathi function, ஆர்எஸ்எஸ், சேவா பாரதி, ஆர் எஸ் எஸ் அமைப்பு சேவா பாரதி நிகழ்ச்சியி திமுக அமைச்சர்கள், முபெ சுவாமிநாதன், அமைசர் கயல்விழி, sewa bharathi covid 19 care Centre opening function, dmk ministers m p swaminathan, dmk mla selvaraj, minister kayalvizhi, கோவிட் 19 கேர் செண்டர், திருப்பூர், sewa bharathi, rss, rss organization

திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் பாஜக அரசியலையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியலை கடுமையாம விமர்சித்து வருகிறார்கள். சிந்தாந்த அளவில் ஆர்.எஸ்.எஸ் திராவிட இயக்கம் முற்றிலும் மாறானவை என்று திராவிட இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், ஜூன் 13ம் தேதி திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பு அமைப்பாக அறியப்படும் சேவாபாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் 19 கேர் செண்டர்ர் விழாவில் திமுக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோ கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக அமைச்சர்கள் பாரத மாதா படத்தின் முன்பு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருப்பூர் சேவாபாரதி & ஹார்ட்ஃபுல்நெஸ் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் நானும் திறந்து வைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியலுக்கு எதிரான அரசியலை திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் முன்வைப்பதாக திராவிட இயக்கங்களின் தரப்பு பேசி வந்த நிலையில், திமுக அமைச்சர்களே ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டது திராவிட இயக்க ஆர்வலர்களின் சார்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள், வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல் துறை அதிகாரிகள் படை சூழ ‘சேவா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பாரத மாதா படத்திற்கு பூஜை செய்திருக்கிறார்கள். அமைச்சர் சாமிநாதன் தன்னுடைய கருப்பு, சிவப்பு அடையாள வேட்டி கூட இருந்துவிடக் கூடாதென்று பட்டுவேட்டி சகிதமாக பங்கேற்று இருக்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களை எந்த அமைப்பு செய்தாலும் அதில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி ஒன்றிய அரசு தான் இந்தியாவில் நடக்கிறது என்பதை இலட்சிய முழக்கமாக திமுக கொண்டிருக்கிற நிலையில் இந்தியா ஒற்றை தேசம் என்று கூறி அதன் குறியீடாக பாரத மாதாவை முன் நிறுத்துகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், பாரத மாதா படத்திற்கு மாலையிட்டு பங்கேற்பது என்பது திமுக ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைக்கு அவமதிப்பு என்றே நாம் கருத வேண்டி இருக்கிறது. மற்றொன்று, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் முகநூலில் பதிவிட்டிருக்கிற செய்தி, திராவிட இயக்க ஆதரவு, திமுக ஆதரவு என்ற போர்வையில் பதுங்கி கொண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி முகநூலில் ஒரு இயக்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிற சுப்ரமணியசாமி சீடர்கள் மீதும் திமுக தனது கவனத்தை செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும்.

ஊடுருவல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அது பெரும் ஆபத்துகளை உருவாக்கிவிடும் என்பதை கடமையுடனும், கவலையுடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment