செப்டம்பர் மாதத்தை திராவிட இயக்கம் மாதமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க. துவக்கப்பட்ட ராபின்சன் பூங்கா மற்றும் பிற குறிப்பிடத்தக்க இடங்கள் வழியாக, திராவிட இயக்கம் நடை நிகழ்ச்சிகள் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் செப்டம்பர் மாதத்தில் வருகிறது. அதே போல, தி.மு.க தொடங்கப்பட்டதும் செப்டம்பர் மாதத்தில்தான் என்பதால் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
திராவிட இயக்கம் மாதம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தி.மு.க., துவக்கப்பட்ட ராபின்சன் பூங்கா மற்றும் பிற குறிப்பிடத்தக்க இடங்கள் வழியாக, திராவிட இயக்கம் நடை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், செப்டம்பர் மாதம் முழுவதும் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களுடன் ட்விட்டர் விவாதங்களை நடத்தவும் திமுக ஐடி விங் முடிவு செய்துள்ளது.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் கருத்துப்படி, “பல இளைஞர்கள் வலதுசாரிகளின் நச்சுப் பிரச்சாரத்தில் விழுந்து கொண்டிருப்பதால் திராவிட இயக்கங்களின் தலைவர்களையும் அவர்களின் சாதனைகளையும் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதனால், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தளமான ட்விட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பங்கேற்று, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கத்தின் தேவை மற்றும் நாட்டிற்கான திராவிட மாடல் ஆட்சி குறித்து விரிவாக பேசுவார்கள்” என்று தெரிவித்தனர்.
மேலும், திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நீதிக்கான அவர்களின் போராட்டம் பற்றிய சிறிய ஆவணப்படங்களையும் ஒளிபரப்பு செய்வார்கள் என்றும் செப்டம்பர் 1ம் தேதி, முதல் தலைமுறை திராவிட இயக்கத் தலைவரும், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தின் முக்கிய பெண் தலைவருமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை ஐடி விங் வெளியிட்டோம் என்று தெரிவித்தனர்.
இதுவரை, திராவிடப் பொருளாதாரம், திராவிட மாடல், உலகம் முழுவதும் திராவிடம், திராவிடத்தால் கற்றது என்ற தலைப்புகளில் ட்விட்டரில் ஸ்பேசஸ் தளத்தில் திமுக ஐ.டி விங் கூட்டங்களை நடத்தி வருகிறது. நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, பெரியார் திடல் போன்ற திராவிடத் தலைவர்களின் பெயரால் அழைக்கப்படும் மாநிலம் முழுவதும் உள்ள இடங்களுக்குச் சென்று அந்த தலைவர்களின் பணிகளை நினைவு கூர்வதற்கும், சமுதாய சீர்திருத்தத்திற்காக அர்ப்பணித்ததற்காக அவர்களைக் கவுரவிப்பதற்கும் திமுக ஐ.டி விங் திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“