Advertisment

இந்திய அளவில் ட்ரெண்டான #இடுப்புகிள்ளிதிமுக....

திமுக போராட்டத்தில் பெண் ஒருவர் , இளைஞர் அணி நிர்வாகியால் சீண்டலுக்கு உள்ளானது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய அளவில்   ட்ரெண்டான #இடுப்புகிள்ளிதிமுக....

திமுக சார்பில் நடைப்பெற்ற  போராட்டத்தில் பெண் ஒருவரின் இடுப்பை கிள்ளிய சம்பவம் இந்திய அளவில்  என்ற பெயரில்  பரவி வருகிறது.

Advertisment

தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று(5.4.18)  கடையடைப்பு மற்றும் போராட்டம்  நடைப்பெற்றது.  திமுகவினரின் இந்த போராட்டத்திற்கு  வணிக சங்கங்களும்  ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திட்டமிட்டப்படி,   நேற்று தமிழகம் முழுவதும்  பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன.  சில இடங்களில் ரயில் மறிப்பு, தீக்குளிப்பு முயற்சி,  பேருந்து கண்ணாடி உடைப்பு என எதிர்பாராத பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.  இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.  அதே போல் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்து வகையில் நடந்துக் கொண்டதற்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ட்விட்டர் வலைப்பக்கத்தில்,  #dmkporotest  என்ற  ஹாஷ்டேக் ஒன்று  தமிழ்நாடு அளவில் ட்ரெண்டாகியது. ஆனால், இன்று காலை முதலே,  என்ற பெயரில் புதிய ஹாஸ்டேக் ஒன்று இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இதுக் குறித்து ஆராய்ந்தால்,  திமுக போராட்டத்தில் பெண் ஒருவர் , இளைஞர் அணி நிர்வாகியால் சீண்டலுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.  கரூரில் ஜெயமணி என்ற  பெண்  திமுக போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.அப்போது அவரின் இடுப்பை திமுக இளைஞர் அணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் கிள்ளியுள்ளார்.

 

,

 

அதிர்சியடைந்த அந்த பெண், பிரபாகரை  முறைத்து விட்டு, தனது கணவனிடன் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்பு இருவரும் பிரபாகரன் மீது நகர செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளன். மேலும், ஜெயமணியை இதுக் குறித்து வெளியில்  கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆனால், இதை கண்டு பயப்படாத அவர்,  ஊடகங்களுக்கு தனக்கு நேர்ந்தவற்றை கூறி நியாயம் கேட்டுள்ளார், மேலும், செயல் தலைவர் ஸ்டாலினிடமும் இதுக் குறித்து முறையிட போவதாகவும் தெரிவித்தார்.  ஆனால், அதற்குள்  இதுக் குறித்து செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

இளைஞர்கள் பலரும்,   என்ற ஷாஸ்டேகில் மீம்ஸ்கள், வீடியோக்களை பதிவிட்டு ஸ்டாலின் மற்றும் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர்.

 

,

 

,

 

,

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment