சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதை கண்டிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி, டிவிட் செய்ய, திமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கஸ்தூரியின் முதல் ட்விட்
தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கஸ்தூரி. அவர் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். மாட்டிறைச்சி, ரஜினி அரசியல் பிரவேசம் உள்பட பல்வேறு விஷயங்களில் அவருடைய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
கஸ்தூரியின் இரண்டாவது ட்விட்
இந்நிலையில், நேற்று சட்ட பேரவையில் திமுகவினர், நம்பிக்கை வாக்கெட்டுப்புக்கு பணம் கொடுத்ததாக எம்.எல்.ஏ. சரவணன் சொன்னது குறித்து விவாதிக்க அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் சம்மதிக்கவில்லை. அமளியில் ஈடுபட்டதாக திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரோடு மறியல். ‘யார் அப்பன் வீட்டு காசு என்று கோஷம்’. எல்லாம் பழக்கத்தோஷம்’ என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து திமுகவினர் அவரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக மீண்டும் ஒரு பதிவை அவர் செய்துள்ளார். அதில், ‘முந்தைய டிவிட்க்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.’ என்று சொல்லியுள்ளார்.
சபாநயகரை நக்கலடித்து ட்விட்
கூடவே சபாநாயகர் தனபாலை நக்கலடிக்கும் விதமாக ஒரு டிவிட் செய்துள்ளார். அதில், ‘உலகின் சிறந்த ஸ்பீக்கர் தனபால். உலகமகா ஸ்பீக்கர்’ என்று பதிவிட்டுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.