அதிமுக ஆட்சி இன்றோ நாளையோ கவிழ வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: தற்போது டெங்கு காய்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு >குழுவினால் எந்த பயனும் இல்லை. டெங்கு காய்ச்சலுக்கும், அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல அவர்களது பேட்டி இருக்கிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களை கொச்சைப் படுத்தும் விதமாக அவர்களது பேச்சு அமைந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவில்லை. மாறாக புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்கிற பேரில் மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு விழாவில், எதிர்க்கட்சி குறித்து விமர்சித்திருக்கிறார். கட்சி விழாவில் திமுக குறித்து விமர்சிப்பத்தை நான் ஒன்றும் கூறவில்லை, ஆனால் அரசு விழாவில் எதிர்க்கட்சி குறித்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மு.க ஸ்டாலின் நான்கு நயவஞ்சக நாக்கு, பயங்கர ஆயுதம் என அன்த விழாவில் பேசியிருக்கிறார். எதிர்கட்சி என்கிற முறையில் எனது பணியை நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன். நயவஞ்சகத்தின் மறு உருவமே குட்கா பாஸ்கர் தான். அவது பெயர் விஜயபாஸ்கர் அல்ல குட்கா பாஸ்கர். தற்போது டெங்கு பாஸ்கராக மாறியிருக்கிறார். ரூ.89 கோடி வருமான வரித்துறை பரிமுதல் செய்யப்பட்டது குறித்து அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதேபோல, குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிதிலும் பதில் இல்லை .
குட்கா விவகாரத்தை வெளியிட்ட பத்திரிக்கை மீதும், எதிர்க்கட்சி தலைவர் மீதும் மானநஷ்ட வழக்கு போடுவேன் என சட்டமன்றத்தில் பேசிய விஜய பாஸ்கர், தற்போது ஏன் வழக்கு போடவில்லை. வெக்கம், சூடு, என அவர் உண்மையாக ஆண்மகனாக இருந்திருந்தால் என் மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். முதலில் அதற்கு பதில் சொல்லட்டும். அதற்கு பின்னர் அவரது பேச்சுக்கு நான் பதிலளிக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கும், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் வேலுமணி கூறியது குறித்து?
அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லாமல் அமைச்சராக இருக்கின்றனர். அது தான் என்னுடை பதில்.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக மு.க ஸ்டாலின் இருக்க விரும்பினால், அதனை நிறைவேற்ற தயார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியது குறித்து?
அவரது பேச்சு வேடிக்கையாக இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரான பின்னர் 3 வருடங்களில் தான் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்திருக்கிறார். நான் 1996-ம் ஆண்டு சென்னை மேயராக இருந்தபோது, சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஈடுபட்டு எந்த அளவில் வெற்றிபெற்றேன் என்பது தமிழிசைக்கு தெரியவாது. முதலில் தமிழிசை அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கூறியது குறித்து?
டிசம்பர் மாதம் வரையில் இந்த ஆட்சி நீடிக்கும் என்பதே அதிகம். இன்றோ, நாளையோ இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.