ஷார்ஜாவில் மு.க.ஸ்டாலின்: மனைவி துர்காவுடன் புத்தக கண்காட்சியில் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்காவுடன் கலந்துகொண்டார்.

By: November 4, 2017, 8:53:08 AM

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஷார்ஜாவில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வர். ஏற்கனவே மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இந்த புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தாண்டு ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்காக, மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டு சென்றார்.

தன் மனைவியுடன் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின,

இந்த புத்தக கண்காட்சியில், சர்வதேச புத்தக வாசிப்பாளர்களுக்காக, தனக்கு அன்பளிப்பாக வந்த 1,000 தமிழ் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்க உள்ளார் என, வெள்ளிக்கிழமை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk working president m k stalin participated in sharjah book fair with his wife durga stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X