Advertisment

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுவோம் - உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும் உங்களிடம் நாங்கள் சொல்லப்போகிற ஒரே வார்த்த இந்தி தெரியாது போடா என்பதுதான்.

author-image
WebDesk
New Update
Udhayanidhi Stalin says call me as Chinnavar, Udhayanidhi Stalin, DMK, Udhayanidhi Stalin not interest in irandam kalaignar, சின்னவர், உதயநிதி ஸ்டாலின், சின்னவர் என்று என்னை அழையுங்கள் உதயநிதி விருப்பம், இரண்டாம் கலைஞர் என அழைப்பதில் விருப்பம் இல்லை, திமுக, Udhayanidhi, Chinnavar Udhyanidhi

இந்தியை திணிக்க மீண்டும் முயன்றால் திமுக சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் எந்த வகையில் இந்தியை திணித்தாலும் எங்களின் ஒரே பதில் இந்தி தெரியாது போடா என்பதுதான் என்று எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisment

பெரியார் அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. போராட்டம் நடந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து இந்தி மொழியை தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் இருமொழி கல்வியை மும்மொழி கல்வியாக மாற்றி புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு  முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு ஜனாதிபாதி திரௌபதி முர்முவிடம் கொடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைகழங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயின்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்திய மொழி கல்வியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும் அரசின் போட்டித்தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க. இளைஞரணி மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசை ஒன்றி அரசு என்று சொன்னால் தான் கோபம வரும். அதனால்அப்படியே சொல்வோம். ஒன்றிப பிரதமர் மோடி அவர்களே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் இங்கு நடப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல்வராக இருப்பவர் எடப்பாடி பழச்சாமியோ, ஒ.பன்னீர்செல்வமோஅல்ல. தமிழகத்தை ஆண்டுகொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

இப்போது வெறும் ஆர்ப்பாட்டம் தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா இல்லையா என்பது உங்கள் கையில் தான் உள்ளது. திமுகவின் முக்கிய கொள்ளை இந்தி எதிர்ப்பு. இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதில் இருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம். விட்டக்கொடுக்கவும் மாட்டோம். இது எங்கள் மாநில உரிமை. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும சரி ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி எங்கள் தலைவர் அதனை விட்டுக்கொடுக்க மாட்டார். காரணம் நாங்கள் பெரியார் அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக.

நாங்கள் தற்போது ஆளும்கட்சியாக இருப்பதால் ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடநத்தினோம். கூடினோம் கலைந்தோம் என்று கண்டிப்பாக இருக்க மாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும் உங்களிடம் நாங்கள் சொல்லப்போகிற ஒரே வார்த்த இந்தி தெரியாது போடா என்பதுதான். அதை எப்போதும் சொல்லிக்கொண்டிருப்போம்.

திமுக 3 மொழிப்போர்களை சந்தித்துள்ளது. இதில் மாணவர் அணி 2 போரை நடத்தியுள்ளது. தற்போது மாணவர் அணியுடன் இளைஞரணியும் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். இந்த இரு அணிகளும் இணைந்து கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். முதல்கட்ட போராட்டம் கலைஞர் அவர்கள் கட்டிக்கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம்.

நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால் அடுத்த கட்ட போராட்டம் தமிழத்தில் மட்டுமல்லாமல் தலைவரின் ஆணைப்பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம். தமிழக மக்கள் என்றும் உங்களின் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். எப்படி 2019 தேர்தலில் பாசிச பாஜகலைவ ஏட ஏட விரட்டி அடித்தோமோ அண்ணன் தயாநிதிமாறன் அவர்கள் கூறியதுபோல 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு இது சிறந்த தொடக்கமாக இருக்கும். 2019 போலவே 2024 தேர்தலிலும் பாசிச பாஜகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment