ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் இஷ்டம் என்றும் இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என் அறிவித்துள்ளார். மேலும், என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய இதை நான் செய்யவில்லை எனில், காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், "ரஜினி அரசியலுக்கு வருவது அவரோட இஷ்டம். அதை நாங்கள் தடுக்கவா முடியும். திமுகவுக்கு ரஜினி வருகையால் எந்த பாதகமும் இருக்காது. திமுகவின் பாணியே தனி. ஆன்மீக அரசியல் செய்வதாக ரஜினிகாந்த் கூறியது அவர் பாணி, அதில் கருத்து கூற முடியாது" என்றார்.
திமுக பாணி வேறு; ரஜினி பாணி வேறு: சூப்பர்ஸ்டாரின் அரசியல் என்ட்ரி குறித்து துரைமுருகன்!
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து

Tamil nadu news today live
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் இஷ்டம் என்றும் இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என் அறிவித்துள்ளார். மேலும், என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய இதை நான் செய்யவில்லை எனில், காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில், "ரஜினி அரசியலுக்கு வருவது அவரோட இஷ்டம். அதை நாங்கள் தடுக்கவா முடியும். திமுகவுக்கு ரஜினி வருகையால் எந்த பாதகமும் இருக்காது. திமுகவின் பாணியே தனி. ஆன்மீக அரசியல் செய்வதாக ரஜினிகாந்த் கூறியது அவர் பாணி, அதில் கருத்து கூற முடியாது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.