’என் கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுங்கள்’: மருத்துவர் சைமனின் மனைவி கண்ணீர்

கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

By: Updated: April 22, 2020, 09:07:21 PM

Doctor Simon Hercules : கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்க்யூலஸின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, வேண்டுகோள் விடுத்திருக்கிறார், அவரது மனைவி.

ட்ரோன்களால் சுத்திகரிக்கப்படும் CORONA மருத்துவமனைகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்க்யூலஸின் உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவிடாமல் நடைபெற்ற வன்முறைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு : ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43 ஆயிரம் கோடிக்கு வாங்கிய பேஸ்புக்

குடும்பத்தினருடன், மருத்துவர் சைமன் கடைசியாக பேசிய வீடியோ அழைப்பில், ஒருவேளை நான் மீண்டு வரவில்லை என்றால், நம்ம மதச் சடங்குகளின்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யுமாறு கூறியதாக ஆனந்தி சைமன் உருக்கமாக தெரிவித்தார். ”சீல்டு செய்யப்பட்டுள்ள சவப்பெட்டியில் மருத்துவர் சைமன் புதைக்கப்பட்டுள்ளதால், அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க வேண்டும்” என தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று, ஆனந்தி சைமன் கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Doctor simon hercules wife request to cm edappadi palaniswami

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X