Advertisment

சென்னையில் முழு கண்காணிப்பில் 2 மருத்துவமனைகள்: டாக்டர்களுக்கு கொரோனா எதிரொலி

சென்னையில் 2 மருத்துவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் அவர்கள் பணிபுரிந்த 2 மருத்துவமனைகளும் கண்காணிப்பில் உள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்த மருத்துவப் பணியாளர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus 13 patients cured and discharged from Nellai Government hospital

Coronavirus 13 patients cured and discharged from Nellai Government hospital

சென்னையில் 2 மருத்துவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் அவர்கள் பணிபுரிந்த 2 மருத்துவமனைகளும் கண்காணிப்பில் உள்ளன.

Advertisment

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ ரெய்னி மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவருக்கு ஏப்ரல் 11-ம் தேதி கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கோவிட்-19 பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மருத்துவமனை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த 44வயது பொது மருத்துவர் ஒருவருக்கு ஏப்ரல் 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து, அவருடன் பணி புரிந்து மருத்துவப் பணியாளர்கள் 70 பேர்களும் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சென்னையில், ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவருக்கும், அரசு மருத்துவமனை மருத்துவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனையும் அரசு மருத்துவமனையும் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுளன. மேலும், சென்னை மாநகராட்சி ட்ரோன்களைப் பயன்படுத்தி அப்பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒரு மகளிர் மருத்துவ நிபுணர். இவர் ஏப்ரல் 3-ம் தேதி வரை பணியில் இருந்தார். அவரது தந்தையும் ஒரு மருத்துவர். அவருக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி அவருக்கு ஏப்ரல் 8-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனையையும் அதை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிலான பரப்பளவை நிறுவனம் கிருமி நாசினி தெளித்து கிருமி நீக்கம் செய்து வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் மாதிரிகளை எடுத்துள்ளதாகவும், இதுவரை அனைத்து நோயாளிகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தனியார் மருத்துவமனை சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 49 வது பிரிவில் அமைந்துள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் மருத்துவர் மருத்துவமனைக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது மருத்துவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் ஊடகங்களிடம் கூறுகையில், “மருத்துவர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம். மருத்துவர்களுகு வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, வயதான மருத்துவர்கள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம்” என்று கூறினார்.

சென்னையில், 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனைகள் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்த மருத்துவப் பணியாளர்களும் கண்காணிப்பில் உள்ளனர். இதனால், அவர்கள் தொடர்புடைய ஒரு தனியார் மருத்துவமனையும் அரசு மருத்துவமனையும் கண்காணிப்பில் உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment