மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

By: Updated: August 4, 2017, 08:41:16 PM

மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் “கொள்ளையனே வெளியேறு” நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், வருகிற 8-ம் தேதியன்று சென்னை மெரீனா ஊழல் அரசியல் வாதிகளுக்கு எதிராக “கொள்ளையனே வெளியேறு” போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக அனுமதி அளிக்க கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர், தற்போது மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறையினரால் அனுமதி அளிப்பது இல்லை.

இந்நிலையில் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை போல் தற்போது “கொள்ளையனே வெளியேறு” என்ற முழக்கத்துடன் துண்டு பிரசுரங்கள் வழங்கி போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்தபோது அதை காவல்துறையினர் நிராகரித்தனர். மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசராணை இன்று நடைபெற்ற போது, மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

மேலும், மெரீனா கடற்கரையில் சீரணி அரங்கம் இருந்தது. முன்பெல்லாம் இங்கு பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த அனுமதியிருந்தது. ஆனால் கடந்த 2003-ஆம் ஆண்டு சீரணி அரங்கம் இடிக்கப்பட்டது, இது தொடர்பான வழக்கில், மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம், போராட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை. மேலும் இந்த இடத்தில் தான் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மனுதார் கூற முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து, டிராஃபிக் ராமசாமியின் மனுவை இரண்டு நாட்களில் பரிசீலக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Does not have permission to hold the protest tn government says in chennai highcourt

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X