Advertisment

40 ஆண்டுகள் கழித்து படமாக எடுப்பது ஏன்? கிருஷ்ண சாமி கேள்வி

நாங்கள் அண்ணன், தம்பியாக பழகும்போது 40 ஆண்டுகள் கழித்து ஏன் படம் எடுக்க வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dr Krishnasamy said that there is a possibility of contesting against Kanimozhi in Thoothukudi

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேவர் மகன், கொம்பன் உள்ளிட்ட படங்களை பார்க்கவில்லை என்றும் பார்க்காமல்தான் கருத்து கூறினேன்” என்றும் பதிலுரைத்தார்.

Advertisment

தொடர்ந்து அவர் பேசுகையில் நடிகர் விஜய் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவரை நாங்கள் வரவேற்போம். விஜய் படத்தில்தான் புகைப்பிடிக்கிறார்.

நிஜத்தில் அவர் புகை மற்றும் மது ஒழிப்பு பரப்புரையில் ஈடுபட வேண்டும்.

பல்வேறு பிரச்னைகளுக்கு நாங்கள் குரல் கொடுத்தோம். ஆனால் அப்போது எங்களுக்காக யாரும் நிற்கவில்லை. எங்கள் தரப்பு நியாயங்களை மறைமுகமாக கூட படமாக எடுக்க முன்வரவில்லை.

ஆனால் நாங்கள் தற்போது அண்ணன், தம்பிகளாக பழகிவருகிறோம். தற்போது படமாக எடுப்பது ஏன்? கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் படமாக எடுக்கின்றனர்? எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து, “ஒரே சாதிக்குள்ளும் சண்டை நடைபெற கூடாது” என்றார். மேலும் கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தாம் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thoothukudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment