தன் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.
Advertisment
ஜம்மு காஷ்மீரில் உயிர் நீத்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற, திமுக மூத்தத் தலைவரும், நிதியமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா தொண்டர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் டாகடர் சரவணன் மனிப்பு கோரினார். மேலும் பாஜகவில் நிலவும் மத அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும் மன நிம்மதி வேண்டும் என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்த ட்வீட்டில் “ நேற்றைய சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும். அதை பின்பு சொல்கிறேன். விமான நிலையத்தில் 100 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லாவும் அவரது 10 நிர்வாகிகளுக்கும், உங்களது காலணி வேண்டும் என்றால் பெற்றுக்கொள்ளலாம். எனது ஊழியர் அதை பத்திரமாக வைத்துள்ளார்” என்று ட்விட்டர் செய்துள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.