தமிழகம் முழுவதும் இன்று(அக்டோபர் 3) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். தமிழககத்தின் ஒட்டுமொத்த வரைவு வாக்காளர் பட்டியல், மற்றும் அதனை சார்ந்த புள்ளிவிபரங்களை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையானது 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 ஆகும். அவற்றில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேர், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 242 பேர்.
வாக்காளர்கள் விகிதத்தை பொறுத்தவரையிர்ல 75.07 என்ற விகிதத்தில் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 75% வாக்காளர்கள் ஆவர். தமிழகத்தில் அதிக வாக்களர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 405 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள்-3 லட்சத்து 13 ஆயிரத்து 789 பேர், பெண் வாக்காளர்கள்- 3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பேர் மூன்றாம் பாலினத்தவர் 74 பேர்) உள்ளனர்.
இதேபோல, சிறிய தொகுதியாக கீழ் வேலூர் உள்ளது. கீழ் வேலூரில் 11 லட்சத்து 68 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ( ஆண் வாக்காளர்கள்- 83 ஆயிரத்து 016 பேர். பெண் வாக்காளர்கள்-85 ஆயிரத்து 258 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்) உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் அதிகம் உள்ள தொகுதியாக மதுரவாயல் உள்ளது. மதுரவாயலில் மூன்றாம் பாலினத்தவர் 130 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 5 லட்சத்து 47 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களை திருத்திக்கொள்ள அக்டோபர் 8-ம் தேதி மற்றும் 22-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ள முடியும். www.elections.tn.Gov.in மற்றும் www.nasp.in ஆகிய வலைதளங்கள் மூலமாகவும் இது தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.