உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரி உரிமை மீட்புப் பயணம் : இன்று தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என குற்றம் சாட்டினார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும் எனவும் அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டார்,

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

Advertisment
Advertisements

தமிழகத்தில் 7000 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான வசதி இல்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மருத்துவமனையில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

ஆனால், இதனை சரி செய்ய வேண்டிய அமைச்சர்கள் எந்த துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என பார்த்துக் கொண்டுள்ளனர். ஒருவேளை டெங்குவை பரப்பும் கொசுவிடமும் ஏதாவது வாங்கலாமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை. குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி அரசு இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் விமர்சித்தார்.

Mk Stalin Dmk Minister Vijayabaskar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: